பன்றி காய்ச்சலுக்கு 'கபசுர குடிநீர்' தடுப்பு மருந்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

பன்றி காய்ச்சலுக்கு 'கபசுர குடிநீர்' தடுப்பு மருந்து


டெங்கு காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவது போல், பன்றி காய்ச்சலுக்கு, தடுப்பு மருந்தாக, 'கபசுர குடிநீர்' அருந்தலாம்' என, தமிழ்நாடுசித்த மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.சென்னை, தலைமை செயலகத்தில், சங்க துணைச் செயலர் தமிழ்கனி, நிருபர்களிடம் கூறியதாவது:

மூலிகை கண்காட்சி:

தலைமை செயலக வளாகத்தில், தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடத்தப்படுகிறது. முகாமில், 'நில வேம்பு கஷாயம், கபசுர குடிநீர்' வழங்கப்படுகிறது. தொற்றா நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றுக்கும் மருந்து வழங்கப்படுகிறது. இவை அணுகாமல் இருக்க, ஆலோசனை வழங்கப்படுகிறது.வாத நோய்கள், அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நோய்களுக்கு, வர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து தலைமை செயலக ஊழியர்களுக்கும், தலா ஒரு மூலிகை கன்று, இலவசமாக வழங்கப்படுகிறது. முகாம் நடைபெறும், பத்து நாட்களும், தூதுவளைசூப், இதய நோய்க்கான சூப் தினமும் வழங்கப்படுகிறது. மொத்தம், 30 வகையான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.

தடுப்பு மருந்து:

பன்றி காய்ச்சல், வைரஸ் நோய். இந்நோய் வராமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடிக்கடி கை கழுவ வேண்டும். பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்லும்போது, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தனி அறையில்:

நோய் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர்கள் ஆலோசனையுடன், தனி அறையில் இருக்க வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும்போது, தேவையற்ற இடங்களில், கை வைக்கக் கூடாது. டெங்கு காய்ச்சலுக்கு,'நில வேம்பு கஷாயம்' குடிப்பதுபோல், பன்றி காய்ச்சல் வராமல் இருக்க, 'கபசுர குடிநீர்' குடிக்கலாம். தமிழகத்தில், பரவலாக பன்றி காய்ச்சல் இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு வருகிறது. அவர்களுக்கு, 'கபசுர குடிநீர்' வழங்கப்படுகிறது. இது வைரஸ் கொல்லி மருந்து. பன்றி காய்ச்சல் தடுப்பு அலோபதிமருந்து சாப்பிடுவோரும், இதை அருந்தலாம்.
* 'கபசுர குடிநீர் கஷாயம்' தயாரிக்க, 'கபசுர கஷாயம்' சூரணத்தை, 10 கிராம் எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்க வேண்டும். அது, 50 மி.லி.,யாகும் வரை, சுண்ட காய்ச்சிய பின், அதை வடிகட்டி, காலை, மாலை அருந்த வேண்டும். ஒரு பாக்கெட் ரூ.80
* 'கபசுர குடிநீர்' சூரணம், அனைத்து சித்த மருந்தகங்களிலும் கிடைக்கிறது. நோய் வராதவர்களும், இதை அருந்தலாம். நோய் தாக்குதல் உள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்கலாம். 100 கிராம் எடை கொண்ட ஒரு பாக்கெட் விலை, 80 ரூபாய். இவ்வாறு, தமிழ்கனி தெரிவித்தார்.

மூல பொருட்கள்:

'கபசுர குடிநீர்' கஷாயம் சூரணம், நில வேம்பு, சிறு தேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவல்லி, கோரா கிழங்கு, அக்ரகாரம், சீந்தில், போஸ்டம் என, 11 வகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி