வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2015

வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.இதன்படி, பதவி உயர்வுக்கான தகுதியாக 6 ஆண்டுகள் வி.ஏ.ஓ., பணியை நிறைவு செய்தாலே போதும்.

இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வெளியிட்ட உத்தரவு:

கிராம நிர்வாக அலுவலர்களாக இருப்பவர்களில் 10 ஆண்டுகள் பணியைமுடித்திருந்து உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு மாவட்ட வருவாய்ப் பிரிவுகளில் ஏற்படும் உதவியாளர் காலியிடங்களில் 10 சதவீத இடங்கள் பதவி உயர்வின் மூலம் அளிக்கப்படும். இந்தப் பதவி உயர்வு சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இதற்கான உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும் போது, அவர்கள் 10 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக 6 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், இதற்கான பரிந்துரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் தமிழக வருவாய்த் துறைக்கு வழங்கியிருந்தார். அவரதுபரிந்துரைகளை ஏற்று, உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 10 சதவீதத்துக்குப் பதிலாக 30 சதவீத இடங்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒதுக்கப்படும்.

மேலும், தமிழ்நாடு அமைச்சகப் பணிகளின் விதிகளுக்கு உள்பட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், அவர்களது பதவி உயர்வை நிர்ணயிக்கும் பதவி காலமானது 10 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாகக்குறைக்கப்படும்.பதவி உயர்வுக்கான தகுதிகள் திருத்தப்பட்டுள்ள நிலையில், அவை குறித்து தமிழ்நாடு அமைச்சகப் பணிகளின் விதிகளிலும் திருத்தம் செய்ய வேண்டும். எனவே, இதற்கான வரைவு திருத்தங்களை ஒரு மாதத்துக்குள் வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும் என்று தனது உத்தரவில் வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி