மகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2015

மகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது

திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து சம்பவத்தைக் கண்டித்து காலவரையின்றி மூடப்பட்ட பள்ளி வியாழக்கிழமை வழக்கம் போல் இயங்கியது. திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜ்குமார். கடந்த 19ந் தேதி பள்ளி வளாகத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் அரவிந்த்தை கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவனின் தந்தை ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளி வளாக்தில் ராஜ்குமாரை தாக்கியுள்ளனர்.

காயம் அடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும்படி திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் தனியார்பள்ளி சங்கத்தினரும் பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி காலவரையரையின்றி மூடப்பட்டது.இந்நிலையில் அந்த தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கிய ரமேஷ் என்பவரை திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.இதனையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து காலவரையரையின்றி மூடப்பட்ட பள்ளி வியாழக்கிழமை வழக்கம் போல் இயங்கியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி