WHATSAPP ல் முக்கிய வினாவிடைகளை தயாரித்து வைக்கும் தனியார் பள்ளிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2015

WHATSAPP ல் முக்கிய வினாவிடைகளை தயாரித்து வைக்கும் தனியார் பள்ளிகள்


இந்தாண்டு மார்ச்சில் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் தனியார் பள்ளிகள் மேலும் அதிகமான மதிப்பெண்களை அள்ள போகின்றன. WHATSAPP மூலம் வினாவிடைகளை அறிந்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை
தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்தாண்டு வரை டீ சோமாஸ் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் விடைகளை வழங்கி வந்தவர்கள் தற்போது லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் வருகிறார்கள்.ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக 12 ம் வகுப்பு பாடத்தை நடத்தி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.நாமளும் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருக்கிறோம்.

அரசு பள்ளி ஆசிரியர்களும் லேட்டஸ்டா ஏதாவது பண்ணுங்க சார்

13 comments:

  1. இந்த நொடியே சிந்திக்க தொடங்குங்கள்...சமுக நலனில் அக்கறை கொண்ட உண்மையான ஆசிரியர்கள் மட்டும்

    மீண்டும் ஒரு கல்வி புரட்சிக்கு வித்திடுவோம்..மீட்டெடுப்போம் ஆசிரியர்களின் உரிமைகளையும்,உணர்வுகளையும்.....


    நண்பர்களே உங்கள் விரிவுபட்ட சிந்தனையை ஒரு 25 வருடங்கள் பின்னோக்கி செலுத்துங்கள்.அறிவியலும்,தொழில்நுட்ப அறிவு குறைவாக இருந்த காலமாக இருந்தாலும் அன்றைய மனிதன் சுய மரியாதையுடன் வாழ்ந்து வந்தான்.அந்த காலகட்டங்களில் இருந்த அரசு மக்கள் நலனிலும் வருங்கால தலைமுறையினரின் நலனுக்காகவும் கொண்டுவந்த திட்டங்களின் காரணமாகவே இன்று ஓய்வு பெரும் நிலையில் உள்ள அரசு அதிகாரிகள் பணி பெற்று மக்களின் நலனுக்காக பாடுபட்டார்கள்.

    ஆனால் இன்றைய நிலை என்ன?ஒவ்வொரு 5ஆண்டுக்கு ஒரு முறையும் கடந்த ஆட்சி சரியில்லை என மாற்று கட்சியை தேர்வு செய்து நல்லது நடக்கும் என்று காத்து இருந்ததை தவிர வேறு எந்த இன்பத்தை அனுபவித்தாய் இந்த 25 ஆண்டுகளில்.ஒவ்வொரு கட்சி தலைமையின் மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.நீயா நானா என போட்டி போட்டு கொண்டு மக்களின் வரி பணத்தை சுரண்டி சொத்து சேர்ப்பதில் செலவு செய்த மூளையை மக்களின் நலனுக்காக 5% செலவு செய்து இருந்தால் இன்று நம் வாழ்வு செழிப்பாக இருந்து இருக்கும்.

    சரி விடுங்கள் தோழரே..தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.இதை பேசுவதால் எந்த பயனும் இல்லை.இந்த சமுகத்தை மாற்றும் பொறுப்பு யாருக்கு உள்ளதோ இல்லையோ..ஆசிரியர் பணிக்கு செல்லும் நமக்கு என்றும் உள்ளது.ஏன் என்றால் இந்த நாட்டை வடிவமைக்கும் அனைவரையும் செதுக்கும் சிற்பி நாமே என்பதால் தான்.

    கடந்த கல்வி ஆண்டில் மட்டும் 1500 பள்ளிகள் மூடுவிழா கண்டு விட்டது.இந்த ஆண்டு 2000 பள்ளிகள் மூடு விழா காண இருப்பதாக நம் மக்கள் நல அரசு பெருமையுடனும்,மகிழ்ச்சியுடனும் தெரிவித்து உள்ளது நம் மக்கள் நல அரசின் ஆட்சி முன்னேற்றத்தை காட்டுவதாக உள்ளது.ஏற்கனவே உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்கை குறைந்து வரும் காலகட்டதில்,தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தாலும்,ஆங்கில மொழி மோகத்தாலும் இந்த 2000 பள்ளிகள் மூடு விழா கண்டால் பாதிக்கப்படுவது ஏழை,எளிய மக்களின் குழந்தைகளே....

    வசதி படைத்த மக்கள் தனியார் பள்ளிகளுக்கு ஓடுவதை நாம் தடுக்க வேண்டாம்.அரசு பள்ளிகளை நாடி வரும் குழந்தைகளின் படிப்பறிவை வளர்க்கும் நாம்,நமது கடைமையை சிறப்பாக செய்தலே போதும் என்றே நினைக்க தோன்றுகிறது.வீட்டில் சாப்பாடு இல்லை என்ற நிலையில் தான் நாம் கடை சாப்பாட்டை நாடி செல்கிறோம்.அடிப்படை வசதிகளை குறை கூறி அரசு பள்ளியில் இருந்து தனியாருக்கு செல்லும் மாணவர்களை தடுத்து அரசு பள்ளியிலேயே தொடர வைப்போம்.

    2000 தொடக்க பள்ளிகளை மூட அரசு கூறும் ஒரே பெரிய காரணம் மாணவர் சேர்க்கை குறைவு என்பதே.சேர்க்கை அதிகமானால் தான் அதிக ஆசிரியர் பணியிடம் தேவைப்படும் என்பது உண்மை தான்.ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் இந்த அரசு செய்யும் என்பது கானல்நீர் தான்.நம் பசிக்கு நாம் தானே சாப்பிட வேண்டும்.

    நாம் இன்று மட்டும் அல்ல.எப்போதுமே அரசாங்கத்தை எதிர்பார்பதை விடுத்து நாமே செயலில் இறங்கலாம் தோழர்களே.யாராவது சுதந்திரம் பெற்று தருவார்கள் என்று மகாத்மா நினைத்து இருந்தால் நாம் இங்கே பிறந்து சுதந்திர காற்றை சுவாசித்து இருக்க முடியாது.யாரோ வருவார் இந்த நிலையை மாற்ற என்று ஏங்கி தவிப்பதை விட நாமே அதற்கு தொடக்க புள்ளியாய் இருப்போம்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மாணவனுக்கு சொல்லி தந்த நாம் அதை மறந்து விட்டது ஏன் என்றுதான் புரியவில்லை.


    நண்பர்களே உங்களுக்கு அருகமையில் அரசு பள்ளிகளுக்கு செல்லுங்கள்.அதன் நிலையை பாருங்கள்.தனியாருக்கு பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் கொண்டு வர என்ன என்ன தேவை என்று ஆராயுங்கள்.மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காண என்ன தடையாக உள்ளது,என்ன தேவை என்று அங்கே பணி புரியும் நம் சொந்தங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.


    ReplyDelete
  2. நம்மை பொறுத்தவரை எல்லா அரசு பள்ளிகளும் தனியாரை விட அனைத்து வசதிகளையும் பெற்று சிறப்பாக இருக்க வேண்டும்.

    இருப்பிட வசதி
    கழிப்பறை வசதி
    தளவாட பொருள்கள் வசதி
    கணிணி வசதி
    ஆய்வக வசதி
    ஒளித்திரை வசதி
    சுத்தமான குடிநீர் வசதி
    விளையாட்டு பொருள்கள்
    கற்றல் பொருள்கள்
    காமிரா வசதி
    குளிர்சாதன வசதி
    ஆசிரிய,மாணவ பாதுகாப்பு
    தீயணைப்பு வசதி
    தோட்ட வசதி

    இது எனக்கு தெரிந்தது மட்டுமே.உங்களின் சிந்தனையை கொண்டு தூர் வாருங்கள்.பள்ளி அமைந்து உள்ள கிராமம்,மாவட்டத்தின் பெயரையும் பதிவிடுங்கள்.உங்களுடைய நண்பர்கள்,சொந்தங்கள் அனைவருக்கும் இதை தெரியபடுத்தி புரியவையுங்கள்.ஒன்றிணைந்து தொடங்குவோம் நண்பர்களே.

    இந்த வசதிகளை ஏற்படுத்த ஆகும் செலவுகளை பற்றி சிந்திக்காதே.அதற்கும் வழி உள்ளது நண்பா.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு உண்மை என்றால் இதவும் உண்மையே என்று நம்பு.2000 பள்ளிகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடி தடை ஆணை வாங்குவோம்.அடுத்த கல்வி ஆண்டு தொடங்க இன்னும் முழுதாக 90 நாட்கள் உள்ளன.இறுதி நொடியில் கூட எந்த மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மறக்காதே நண்பா.

    2000 பள்ளிகளின் தகவலையும் நம் சொந்தங்கள் மூலம் பெறுவோம்,அந்த பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தருவோம்.இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகளின் மாணவர்,ஆசிரியர் கணக்கெடுப்பு விவரம் வெளியாகும் நிலையில் உள்ளதால் இது சிரமம் இல்லை.இனி இந்த அரசை எதிர்பார்க்காமல் நம் வாழ்வையும்,வருங்காலத்தையும் நாமே அமைப்போம் நண்பர்களே.

    தயவுசெய்து இந்த கட்டுரையை படித்துவிட்டு மறந்துவிட்டு செல்லாமல் இந்த கொடுமையை கொழுத்த போகும் தீப்பொறியை உன் மனதில் பற்ற வையுங்கள் சொந்தங்களே.நமக்கு நாமே துணை என்று ஒன்று கூடி செயல்படுவோம் ஆசிரியர்களே.

    உங்கள் மனதில் உள்ளவற்றை தயவு செய்து பதிவிடுங்கள்.சிறிய விசயமாக இருந்தாலும் கூறுங்கள்,அது மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும்...2000 அல்ல , சென்ற ஆண்டு மூடிய 1500யும் சேர்த்து 3500 பள்ளிகளை வரும் கல்வி ஆண்டிலேயே திறக்க வைத்து அனைத்து வசதியுடன்,மாணவர் சேர்க்கையையும் அதிகபடுத்தி எந்த மாநிலமும்,எந்த நாடும் செய்யாத சாதனையை நம் தமிழ்நாடு படைக்க இதை படித்த நொடி முதல் சிந்திக்கவும்,செயல்படவும் தொடங்குவோம்.


    என் சொந்தங்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளும் உரிமையுடன் உங்களில் ஒருவனாக ஒரு ஆசிரிய பணிக்கு காத்து இருக்கும் ஆசிரியன்.

    இப்படிக்கு
    சந்திர மோகன்.கு - 9994520604

    மற்றும் பள்ளிகூட இணைய உறுப்பினர்கள்

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Chandra Mohan

      ஒவ்வொரு தடவையும் ஆட்சியமைக்க நாம் அரசியல் கட்சியை தேர்வு செய்யும் போது, நமக்கு மறதி வியாதி தொற்றிகொள்கிறது.

      கடந்த ஆட்சி காலத்தில் அவர்கள் செய்த தவறுகள் அல்லது நமக்கு செய்ய வேண்டியவைகளை செய்யாமல் அவர்கள் சுயநலமாக செயல்பட்டது இவைகள் அனைத்தையும் மறந்து விடுகிறோம்.
      வாக்களிக்கும் போது, இந்த மறதி வியாதியிலிருந்து விடுபட்டாலே, நம் வாழ்வு செழிப்பாக இருக்கும்.

      இருப்பிட வசதியிலிருந்து தோட்ட வசதி வரை நீங்கள் பட்டியலிட்ட ஒரு சில வசதிகளை தவிர, மற்ற அனைத்தும் தேவையில்லை. ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல் பட வேண்டும் என்ற முக்கியமான ஒன்றை மட்டும் மறந்து விட்டீர்கள். இதை ஆசிரியர் உணர்ந்து செயல் பட்டாலே, வரும் காலத்தில் மாணவர்களின் வருகையை கணிசமாக உயர்த்தி விடலாம. இதை சபதமாக ஏற்க ஆசிரியர்கள் தயார?????

      எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, ஆங்கில மோகம், ஆங்கில மோகம் என்று ஒதுக்கி தள்ள ஆங்கிலம் ஒன்றும் அறிவு அல்ல, அது வெறும் மொழி தானே. ஏன் தரமான ஆங்கில மொழையை குழந்தைகளுக்கு பயிற்று தர முடியவில்லை. ஆங்கில மொழி இல்லையென்றால் வரும் காலத்தில் மாணவர்களின் நிலை கேள்விக்குறி என்று தெரிந்தும், அரசின் மேல் குற்றம் சுமத்தி நாம் தப்பித்துக் கொள்கிறோம்.

      எத்தனை மாணவர்கள் தங்கள் பள்ளி இறுதி படிப்பை அதிக மதிப்பெண் பெற்று மருத்தவத்திலோ அல்லது பொறியியல் படிப்பிற்க்கு ஆயிரம் கணவுகளுடன் சென்று அங்கு ஆங்கில மொழியில் நடத்தும் பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் மனம் நொந்து, அவமானம் பட்டு தங்கள் இன்னுயிர்களை மாய்த்துக் கொள்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்னும் சில மாணவ கண்மணிகள் பள்ளிப் படிப்பை முதலிடத்தில் முடித்தும். கல்லூரிகளில் அவர்களால் சோபிக்கமுடியவில்லை. இதற்க்கொல்லாம் யார் காரணம்?? பெற்றோர்களின் ஈடு இணையில்லாத இழப்பிற்க்கு யார் பொறுப்பேற்க்க போகிறோம்.????

      இது வரை கல்வி சார்ந்த வலைகளங்களில், அதிகம் நபர்கள் தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்புக்கு ஆங்கில மோகம் தான் காரணம் என்று நொண்டி சாக்கு சொல்லி கொள்கிறீர்கள். இது உண்மை காரணம் இது இல்லை என்பது பதிவிடும் அனைவர்க்கும் தெரியம். எங்கே தவறு நிகழ்கிறது என்பதை உள்ளன்போடு ஆசிரியர்கள் சரி செய்து கொள்ளாவிட்டால், மேலும் மேலும் அரசு பள்ளிகளை மூடிக் கொண்டு தான் இருக்கும்.

      எங்கே தவறு என்று ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும். இனி மேலும் அரசின் மேலோ, தனியார் பள்ளிகளின் மேலோ குறை கூறாமல், நமது குறைகளை கலைந்து, அரசு பள்ளிகளில் மாணவ வருகையை அதிகமாக்குவோம் என்று சூளுரைப்போம்.

      ஆசிரியர் பணி அறப்பணி என்பதை மற்றவர்களுக்கு உரக்க சொல்வோம்.

      நன்றி

      Delete
    2. நன்றாக சொன்னீர்கள் சார்!.

      Delete
  3. alex sir,i want ur mobile no.pls give me r call to me.pls

    ReplyDelete
  4. congrats for your thoughts. let's welcome all the teachers to kindly cooperate and try to work hard for the welfare of gov.school admission.

    ReplyDelete
  5. Gvt school teacter gives teaching but private school teacher gives coaching . Gvt teacher get more money but low work. pvt teacher gets low money but hard work. My babies one study pvt(2 nd) ,another one is Gvt . I realised practically. why the Gvt teachers did not work hard? they never speach teach but ever speach money..money..what can we do?..changes come from only our teachers not ours.

    ReplyDelete
    Replies
    1. they dont want to teach, just want to get salary....

      Delete
  6. தோழர் அவர்களே அரசு பள்ளியில் கடினமாக உழைக்கும் ஆசிரியர்களும் இன்னும் உள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அரசு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்ற நிலை வந்தால் தான், மாணவர்களின் சேர்க்கை உயரும். நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால் அதிசயத்தை பார்த்தது போல் சொல்லும் நிலை மாற வேண்டும்.

      Delete
  7. Arasu velai mttum vendum antha sambalam vendum.....aanal ungal pillaigal anaivarum thaniyar palliyil nalla sirantha kalvi karka vendum...
    Enna oru uyarntha sinthanai.....
    Arasanga velayai vidunga ethanai arasu asiriyargal thangal kulanthaigalai arasu palliyil serthullargal....
    Neenga sollitharugira kalvimela ungalukke nabikkai illa .....appqdithane
    Yen pakkathilulla pallikku poi vasathi vaippa pakkanumnu solravanga yen anga velaseira asiriyargal thangal kulanthaigalai enga serthullargal enru parkkalame
    appo ungalukku unmai romba nalla theriyum
    thaniyar palliya valinadathuvathum arasu athigarigal thane...
    Arasu pallialil padikkave aalillai enbathal velai vaippu kurainthathal arasu pallimel ....romba akkarai
    athuum yarukku arasu asiriyarukku illai...
    Arasu asiriyraga muyarchi seium asiriyarukku.....
    Ivarum velaikku poitta thannoda vaarisukku thaniyar pallikku odividivar...
    Enna avarkku velaikku uthiravatham kidaichuduthu..
    Arasanga sambalam , salugai appuram en kavalai...
    "Thirudanai parthu thirntha vittal thiruttai olikka mudiyathu" ithu thirudanukku mattumillai .....enbathai anaivarum unara vendum
    sorry,
    Yaar manasayum nogadikka sollavillai
    appadi irunthal mannikkavum
    ( itharkku vithi vilakaga orusilar ullanar intha mannippu antha orusila asiriyargalukaga )

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி