சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள்கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள்கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?


மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி., 12–வது வகுப்பு கணித தேர்வு, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களை மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூறுகின்றனர்.
பாடதிட்டத்துக்கு வெளியேயும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இது மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்தப் பிரச்சினையில் தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக சில பள்ளிக் கூட முதல்வர்களை சி.பி.எஸ்.சி. அழைத்திருக்கிறது.கணித தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் சி.பி.எஸ்.சி. பரிசீலிக்கிறது.இம்ப்ரூவ்மென்ட் தேர்வு நடத்தும் வாய்ப்பு பற்றியும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி