1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணிநியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 1,025 பேருக்கு அவர்களது மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 721 ஆசிரியர்களுக்கு வேறு மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இவர்கள் அனைவரும் திங்கள்கிழமையே பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வுப் பட்டியல் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி