ஏப்ரல் 19-இல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

ஏப்ரல் 19-இல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறஉள்ளது.
அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) உயர்நிலைக் குழுவின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது:

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற பேரணிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆனால், அதன் பிறகும், தமிழக அரசு சார்பில் யாரையும் அழைத்துப் பேச்சு நடத்தவில்லை.இதையடுத்து, அடுத்தகட்டமாக, ஏப்ரல் 19-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

1 comment:

  1. ஈடு செய்தல் விடுப்பிற்கான சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்கும் நாட்கள் அடங்கிய தகவல் இருந்தால் பதிவிடவும்... நன்றி...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி