'வாட்ஸ் அப்'ல் பிளஸ் 1 வினாத்தாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2015

'வாட்ஸ் அப்'ல் பிளஸ் 1 வினாத்தாள்

பரமக்குடி: பிளஸ் 1 மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்விற்கான வினா கேள்வித்தாள்கள், தேர்வுக்கு முதல் நாளே 'வாட்ஸ் அப்' ல் உலா வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்டங்களுக்கன பிளஸ் 1 ஆண்டு இறுதித்தேர்வுகள் மார்ச் 11 முதல் நடந்து வருகிறது. பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடந்து வருகிறது. பரமக்குடியில் 45, ராமநாதபுரத்தில் 70 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. தமிழ் முதல் மற்றும் 2 ம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் 2 ம் தாள், மார்ச் 17 ல் நடந்த இயற்பியல், 19 ல் நடந்த கணிதம், நேற்று நடந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளின் கேள்வித்தாள்களும், தேர்வுக்கு முதல் நாளே 'வாட்ஸ் அப்' ல் உலா வந்து விட்டன. இதை வைத்து பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் அனைத்து கேள்விகளுக்கான பதில்களை அப்படியே எழுதியுள்ளனர்.



ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:





பொதுவாக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 'நோடல் பாயிண்ட்' எனப்படும், வினாத்தாள் கண்காணிப்பு மையம் இருக்கும். அங்கு ஒட்டு மொத்த தேர்விற்கான கேள்வித் தாள்களும் வரும். பின்னர் அங்கிருந்து தினமும் காலையில் அன்றைய தேர்விற்கான கேள்வித்தாள்கள் மட்டும் கொடுக்கப்படும். இதன்படி பரமக்குடியில் 2, முதுகுளத்தூர், சாயல்குடியில் என 'நோடல் பாயிண்ட்'கள் உள்ளன. இந்த வருடம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் நடப்பதால், தலைமை ஆசிரியர்களின் சிரமம் கருதி, அந்தந்த தேர்வு மையத்திற்கே கேள்வித்தாள்கள் மொத்தமாக அனுப்பப்பட்டு விட்டன. இதனால் சில தேர்விற்கான கேள்வித்தாள்கள் 'வாட்ஸ் அப்'பில் தினமும் உலா வந்தன என்றனர். பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டி கூறியதாவது: 'வாட்ஸ் அப்' ல் கேள்வித்தாள் முதல்நாளே வந்து விடுகிறது என்ற தகவலையடுத்து மார்ச் 24 மற்றும் 26 ல் நடக்கவுள்ள தேர்விற்கான கேள்வித்தாள்களை திரும்ப வாங்கியுள்ளோம். அன்றைய தினம் காலையில் தேர்வு மையத்திற்கு அனுப்பப்படும். கேள்வித்தாள்கள் ஏதோ ஒரு மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளிவருவதாக தெரிகிறது. விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி