செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களுக்கான வரிச் சலுகைகள் ஏப்ரல்1 முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2015

செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களுக்கான வரிச் சலுகைகள் ஏப்ரல்1 முதல் அமல்


நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான அரசின் உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தாக்கல் செய்தார். அப்போது, சில பொருள்கள் மீது வரிச் சலுகைகளை அறிவித்தார்.அதன்படி, நெய்தலுக்கு முன்பாக நூலுக்குப் பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஏலக்காய் மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியானது, 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும், செல்லிடப் பேசிகளுக்கு விதிக்கப்பட்டுவந்த 14.5 மதிப்புக் கூட்டு வரியானது 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்று பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில், அவை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வணிக வரிகள் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவில், மூன்று வகையான பொருள்கள் மீதான வரி விலக்கும், வரி குறைப்பும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி