1-ம் வகுப்பிலிருந்தே இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடமாக்குகிறது -இமாச்சல பிரதேசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

1-ம் வகுப்பிலிருந்தே இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடமாக்குகிறது -இமாச்சல பிரதேசம்


மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 1-ம் வகுப்பிலிருந்தே, இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தைக் கட்டாயப் பாடமாக்குவதாக இமாச்சல பிரதேச முதல்வர் விர்பத்ரா சிங் அறிவித்துள்ளார்.
பாண்டா சாகிப் என்ற இடத்தில் கூட்டம் ஒன்றில் நேற்று பேசிய அவர், மாநிலத்தில்அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், தற்போது,அதன் அடிப்படை உள்-கட்டமைப்பு வசதிகளை வலிமையாக்குவதற்கான நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.மேலும், அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது, பல தனியார் கல்வி நிறுவனங்களில் போதுமான கற்பித்தல் மற்றும் தகுதி வாய்ந்த ஊழியர்கள் இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், இமாச்சல பிரதேசத்தை கல்வி மையமாக மாற்றுவதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகுமென்றும் தெரிவித்தார்.

1 comment:

  1. இதை பார்த்தாவது............அரசு திருந்துமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி