குரூப் -2வில் 1:5 விகிதம்தேர்வானவர்கள் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

குரூப் -2வில் 1:5 விகிதம்தேர்வானவர்கள் குழப்பம்


டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 பணியிட நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 பதவிகளான நகராட்சி ஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறை நன்னடத்தை அதிகாரி, கூட்டுறவுசங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1064 பணியிடங்களுக்கு 2014 நவம்பரில் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் மார்ச் 9ல் வெளியானது. இதற்கு முன் தேர்வில் பெற்றவர்களில் 1:2 விகிதாசாரத்தில் தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.தற்போது தேர்வாணையம் 1:5 விகிதாசாரத்தில் தேர்வானவர்களை அழைத்துள்ளது. இதில் யாருக்கு பணிநியமனம் கிடைக்கும், எவ்வாறு தேர்வு செய்யப் படவுள்ளனர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பழநி ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்திகூறுகையில், 'குரூப்-2 வில் 1064 காலி பணி இடங்களுக்கு 5,565 பேருக்கு இம் மாத கடைசியில் சான்றிதழ் சரிபார்த்தல் பணி துவங்க உள்ளது. இது மட்டும் 2 முதல் 3 மாதம் நடைபெறும். அதன் பின் நேர்முகத்தேர்வு நடைபெறும்.இரண்டு முறை சென்னை செல்வதால் மாணவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.1:5 விகிதாசாரத்தில் அழைக்கப்படுபவர்களில் யாருக்கு பணி நியமனம் கிடைக்கும் என்பதில்தேர்வானவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது ' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி