பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2015

பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு


தொழிற்கல்வியில், வேளாண் செயல்முறை கள் பாடத்துக்கு, 'தியரி' தேர்வை, தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பேர் நேற்று எழுதினர். இந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றால், பி.எஸ்.சி., அக்ரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி பட்டப்படிப்புக்கு செல்லலாம்.
ஆனால், வேளாண் செயல்முறைகள் பாட வினாத்தாளில், 59 மதிப்பெண்களுக்கான, 13 வினாக்கள் மாணவர்களுக்கு புரியாத வகையில் இடம்பெற்றுள்ளன.இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 'அக்ரி' மாணவர்களுக்கு, 'புளூ பிரின்ட்' மற்றும் புத்தகத்தின் பின்புறத்தில் இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, 45வது கேள்வியில், 'சொலனேசிய' குடும்பப் பயிர் கலை மற்றும் உர நிர்வாகம் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, 'சொலனேசியா' என்றால் தெரியாது. நன்செய் பயிர் குறித்து, 47வது கேள்வி இடம் பெற்றுள்ளது. ஆனால், தோட்டக்கால் பயிர்தான் மாணவர்கள் கற்றுள்ளனர், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி