குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2015

குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை


குரூப் 2 தேர்வு மூலம் நேரடி நியமன உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுபணிபுரிவோருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமல்லாது,
வருவாய்த் துறையின் கீழ் வரும் எந்த அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் அந்த பணிக் காலமும் பதவி உயர்வுக்கு கருத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மூலம் ஒரே நேரத்தில்ஏராளமானவர்கள் நேரடி நியமன உதவியாளர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனால், அவர்களில் பலர் பதவி உயர்வுக்கான பயிற்சியை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையைக் களையும் வகையில் புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கோரிக்கை மனு:

துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நில அளவைப் பயிற்சி, மூன்றாண்டுகள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் பணி, இரண்டாண்டுகள் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பணி ஆகியவற்றை முடித்திருந்தாலே அவர்களை துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று பதவி உயர்வுக்கான புதிய நடைமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.பதவி உயர்வுக்கென மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மட்டுமே வருவாய் உதவியாளர் பணியை ஒன்றரை ஆண்டுகள் வரை மேற்கொள்ள வேண்டும் என இருந்தது.இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணியாற்றுவோர் மட்டுமே இந்தப் பயிற்சியை மேற்கொள்ள முடிகிறது. வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட வருவாய் அலகைச் சேர்ந்த இதர அலுவலகங்களில் பணிபுரியும்ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பயிற்சியை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.

எனவே, இந்த நடைமுறை மாற்றப்படுகிறது. இதற்குப் பதிலாக, ஒன்றரை ஆண்டுகள் பயிற்சிக் காலமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வருவாய்த் துறையில் மாவட்ட வருவாய் அலகிலுள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியவேண்டும் என்று உத்தரவிடப்படுவதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி