தாமதமாக தொடங்கிய பிளஸ்-2 தேர்வு: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மனு:தினத்தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

தாமதமாக தொடங்கிய பிளஸ்-2 தேர்வு: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மனு:தினத்தந்தி


வளவனூர் அரசு பள்ளி யில் பிளஸ்-2 தேர்வு தாமதமாக தொடங்க காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற் றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பிளஸ்-2 தேர்வு

விழுப்புரத்தை அடுத்துள்ள வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தில் 12 அறைகளில் 237 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு மைய முதன்மை கண்காணிப் பாளராக பேரங்கியூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சந்தானம்செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி கணினி அறிவியல் தேர்வு நடப்பதை முதன்மை கண்காணிப்பாளர் மறந்துவிட்டதாக கூறப்படு கிறது. இதன் காரணமாக வளவனூர் அரசு பள்ளியில் சுமார் 1 மணி நேரம் தேர்வு தாமதமாக தொடங்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக் கப்பட்டதின் அடிப்படையில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சந்தானம் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில் நேற்று காலை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பார்வையிட வந்த கலெக்டர் சம்பத்திடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கலெக்டர் சம்பத், தற்போது தான் இந்த சம்பவம் குறித்து தகவல் வந்துள்ளது. விசா ரணை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாணவர்கள் பாதிப்பு

இதற்கிடையே நேற்று வளவனூர்மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் கலெக்டர் சம்பத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-வளவனூர் அரசு பள்ளியில் நடந்த பிளஸ்-2 தேர்வை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சந்தானம் மறந்துள்ளார். இதன் காரணமாக சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக தேர்வு கள் தொடங்கி நடை பெற்றுள்ளது. காலதாமதத் திற்கு மாணவர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் அதுபோல் செயல்படவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே காலதாமதத்திற்கு காரண மான தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பத் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி