உயர்நீதிமன்ற பணிகளில் தட்டச்சர் பதவி: 383 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2015

உயர்நீதிமன்ற பணிகளில் தட்டச்சர் பதவி: 383 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மற்றும் செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–
சென்னை உயர்நீதிமன்ற பணிகளில் அடங்கிய நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் மற்றும் தட்டச்சர் பதவிகளில்காலியாக உள்ள 268 பணி இடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23–ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் 27 ஆயிரத்து 983 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.தட்டச்சர் பணிக்கு திறனறித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 383 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்மற்றும் தரவரிசை நிலையை பதிவு எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது என தெரிய வந்தால் அடுத்தகட்ட நிலைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி