உயர் நீதிமன்றத்தில் தட்டச்சர் பதவி: வரும் 6 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு டி.என்.பி.எஸ்.சி. தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

உயர் நீதிமன்றத்தில் தட்டச்சர் பதவி: வரும் 6 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு டி.என்.பி.எஸ்.சி. தகவல்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:சென்னை உயர்நீதிமன்றப் பணியில் 139 தட்டச்சர் பதவி காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நான்கு நாள்கள் தனித்திறன் தேர்வுகளும் நடத்தப்பட்டன.விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கும் வகையிலும், அந்த விவரங்களின் உண்மைத் தன்மையை அறியும் வகையிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கு 383 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 6, 7 ஆகிய இரு நாள்களும் நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம்.அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் பணிகளுக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருத இயலாது. மேலும், குறிப்பிட்ட நாள், நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்துக் கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி