கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2015

கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு


அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் நேற்று வெளியிடப்பட்டன.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 652 கணினி பயிற்றுநர்களை (கணினி ஆசிரியர்)நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் இறுதி தெரிவுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இரவு இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது.பணிநியமன ஆணை விவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் அறிவிக்கப்படும்.இதேபோல், முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 10-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. பிப்ரவரி 25-ம் தேதி முதுகலை பட்டதாரி தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், உடற்கல்வி இயக்குநர் தேர்வு முடிவு நேற்று இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 10-ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும்.

4 comments:

  1. as per the announcement of computer instructor seniority list for ph (orhto) taken by the www.trb.tn.nic.in till 2014. But the result taken by the www.trb.nic.in upto 2008. I want justice.

    ReplyDelete
  2. DEAR KALVISOLAI,
    I WANT JUSTICE I AM WAITING FOR YOUR REPLY

    ReplyDelete
  3. DEAR KALVISOLAI,
    I am and my family waiting for this result. But what is this sir? I want justice sir. I am physically handicapped. My age is 37 Still how many years i am waiting sir. At that time i am ready to go the job. Or I am living or not sir. I want justice

    ReplyDelete
  4. Don't be late trb and school education board, regarding remaining posts, don't play with our life, how long we will wait for opportunities to get cs teacher posts, we are getting aged, don't waste our service years, give chance for us as soon as possible!!!!!!!!!!!! KINDLY REPLY

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி