தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கைக்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2015

தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கைக்கு...


தட்டச்சு தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி சேர்க்கைக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.மே மாதம் 3ம் வாரம் துவங்கி 6 வாரம் நடக்கும் இத்தேர்வில் பங்கேற்க, 2015 மார்ச் 1ல், 25 வயதாகியிருக்க வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி., அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2015ஏப்.,17 மாலை 5 மணிக்குள் தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.இதர விபரங்களை தொழில் நுட்ப கல்வி இயக்கக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னையில் ஆண், பெண் விண்ணப்பதாரர்களுக்கு தனியாகவும். திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாகர்கோவிலில் இருபாலருக்கும் ஒரே மையமாக பயிற்சிநடைபெறுகிறது என தொழில் நுட்பஇயக்கக முதன்மை செயலர் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடுதட்டெழுத்து, கணினி பள்ளிகள் சங்க செயலர் சோம சங்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி