ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரிதொடர் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2015

ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரிதொடர் போராட்டம்


அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடையஉரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்துஉள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும்நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால்நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும்உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறைபள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதேநாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர்.அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்துபணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின்நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது.

ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள்காலம் கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளைபடும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள்(23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும்சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையைபெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின்பங்களிப்பும் வழங்க வேண்டும்.

இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றிபெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகிநமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்தபணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமதுநோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும்தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.அனைவரும் வருக! ஆதரவு தருக!இப்படிக்கு,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்)இடைநிலை ஆசிரியர்கள்,தமிழ்நாடு.

தொடர்புக்கு :-

ஜெகநாதன் மதுரை – 9442880680

ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் –மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949

ரமேஷ் நாமக்கல்-9942015830

சிவபிரகாஷ் கோவை –7708058814

பழனி திருவண்ணாமலை-9524805873

7 comments:

  1. Thank you ji anaivarum kalanthu kollungal tgavaraamal

    ReplyDelete
  2. "எனது மதிப்பிற்குரிய ஆசிரியர் சகாக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! ஆசிரியர் பணிக்காக காலிப்பணியிடங்களை வெளிவராத சூழ்நிலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் நாங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம் ஆகவே எங்களுக்கு புதிதாக பணியிடங்களை உருவாக்கி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டத்தை செய்ததின் பயனாக 3 அமைச்சர்கள் அவர்களை சந்தித்து உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றபடும் என்று உத்திரவாதம் கொடுத்த பிறகே அவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் நமக்கு அப்படி ஒன்றும் புதிதாக பணியிடங்களை உருவாக்கி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தேவையில்லை அறிவிப்பு வெளியிட்ட 669 ஆசிரியர்களை மட்டும் நிரப்பக்கோரி உரிமையோடு போராட்டத்தை தொடங்குவோம்..! நமது உரிமையை நாம் நிலைநாட்டுவோம்..! வாருங்கள் தோழர்களே வருங்காலத்தை நம் வசமாக்குவோம்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி. .!

    ReplyDelete
  3. ஆசிரியர் சகாக்கள் அனைவரையும் கல்விச்செய்தியின் வாயிலாக அறப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறோம்..! போராட்ட ஒருங்கிணைப்பு குழு..!

    ReplyDelete
  4. என்னிடம் உள்ள புத்தகத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் அதாவது சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் கேள்விகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் இல்லாத கேள்விகளே இல்லை.
    இந்த புத்தகத்தை படிக்கும் முன்னர் சமச்சீர் பாட புத்தகத்தை நன்றாக படித்த பின்னரே இதில் பயிற்சி செய்யவும் அதாவது உதாரணமாக நாம் ஆறாம் வகுப்பு தமிழ் படித்து விட்டோம் என்ற பிறகு நமக்குள் ஒரு திருப்தி அதாவது படித்து முடித்த திருப்தி வரும். அந்த நிலை வரும் போது இந்த புத்தகத்தில் பயிற்சி எடுக்கவும் ஏனெனில் நீங்கள் யோசிக்காத கேள்விகளும் இதில் இருக்கும் அப்போது மீண்டும் நீங்கள் புத்தகத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விடையை பார்க்காமல் மீண்டும் சமச்சீர் புத்தகத்தில் அந்த கேள்வி எங்கு இருந்து எடுக்கப்பட்டது தாங்களால் ஏன் விடையளிக்க முடியவில்லை என்பதை அறிய முயற்சி எடுக்கவும். இந்த முறையில் படித்தால் வெற்றி உறுதி!!!!!

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சமச்சீர் புத்தகமே அடிப்படை அதையே படியுங்கள்

    தொடர்புக்கு 9976715765

    ReplyDelete
    Replies

    1. what is the name of that book pls reply

      Delete
    2. book only available from me If u need please call me

      Delete
  5. Hi friends.....namathu urimai yai nilai natta nammudiya saggakkal anaivarum 23.03.15 andru Chennai varungal .....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி