வெளிநாட்டு வினோதங்கள்-வன்முறை படம் ஒளிபரப்பிய ஆசிரியைக்கு சிக்கல்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

வெளிநாட்டு வினோதங்கள்-வன்முறை படம் ஒளிபரப்பிய ஆசிரியைக்கு சிக்கல்:


மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம் தொடர்பான திரைப்படங்கள் சில நேரங்களில் பள்ளிகளில் ஒளிபரப்புவது உண்டு. ஆனால் அமெரிக்க ஆசிரியை ஒருவர் தவறான படத்தை ஒளிபரப்பி சிக்கலில் மாட்டியுள்ளார்.அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது.
இந்த பள்ளியில் ஷீலா கியான்ஸ் என்பவர், ஸ்பானிஷ் மொழி பயிற்றுவிக்கும் மாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் தனது வகுப்பில்மாணவ-மாணவிகளுக்கு திரைப்படம் ஒன்றை ஒளிபரப்பினார். அந்த திரைப்படம் கொடூரமான வன்முறை காட்சிகளும், ஆபாச காட்சிகளும் அடங்கியதாகும்.இது குறித்து தகவல் அறிந்த நிர்வாகம், அவர் மீது போலீசில் புகார் செய்தது. அதன்பேரில் கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின் போது தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர், அந்த திரைப்படத்தை அதற்கு முன்னர் பார்த்தது இல்லை என்றும், எனவே அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.ஆனால் கோர்ட்டில் சாட்சியளித்த மாணவர் ஒருவர், அந்த ஆசிரியை தங்களுடன் இருந்து உற்சாகமாக திரைப்படத்தை கண்டுகளித்ததாக கூறினார். இதைத்தொடர்ந்து ஆசிரியைக்கு 90 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கோழிக்கறி உண்பதில் சாதனைஅரை மணி நேரத்தில் அதிக கோழிக்கறி துண்டுகள் (இறகுப்பகுதி) உண்ணும் போட்டிஅமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி 23-வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிகாகோவை சேர்ந்த தொழில்முறை சாப்பாட்டு போட்டியாளரான பாட்ரிக் பெர்டோலெட்டியும் கலந்து கொண்டார். போட்டியில் இவர் நிர்ணயிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் 444 கறித்துண்டுகளை விழுங்கி விட்டார். கடைசி 2 நிமிடங்களில் மட்டும்இவர் 50 துண்டுகளை விழுங்கினார். அவர் உண்ட 444 கறித்துண்டுகள் என்பது சாதனையாக மாறியுள்ளது.440 கறித்துண்டுகள் உண்டதே இதுவரை சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை மொல்லி ஸ்குய்லர் என்பவர் படைத்திருந்தார்.மொல்லியின் சாதனையை முறியடித்தது குறித்து பாட்ரிக் கூறுகையில், ‘போட்டி முடிந்த போது சாப்பிட்டே எனக்கு வியர்த்து விட்டது. எனினும் அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் ஒரு துண்டு கூட நான் உண்ண வேண்டாம் என எனக்கு தெரியும்’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி