எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டது


தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுத 3ஆயிரத்து 298 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.
தேர்வை சிறப்பான முறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வர்கள் ஆகியோர் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே விடைத்தாள் அனுப்பும் பணி முடிவடைந்துவிட்டது.அதுபோல விடைத்தாளின் முகப்பு சீட்டு தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. முகப்பு சீட்டில் மாணவரின்தேர்வு எண், அவரது புகைப்படம், ரகசிய கோடு நம்பர் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த முகப்பு சீட்டை தனியாக தேர்வுத்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பும் பணியில் உள்ளது. சில மாவட்டங்களுக்கு முகப்பு சீட்டு அனுப்பப்பட்டு விட்டது.

மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இவை தேர்வு மையங்களுக்கு போய்ச்சேர்ந்த பின்னர் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் நூலைக்கொண்டு விடைத்தாளின் முன் பக்கத்தில் வைத்து முகப்பு சீட்டை தைப்பார்கள்.அதேபோலத்தான் வினாத்தாளும் அனுப்பப்படும். அவை முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பிலும் ஆயுதம் தாங்கிய போலீசாரின் காவலிலும் இருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி