தற்போது மீண்டும் வாட்ஸப் கால் இலவசமாக கொடுத்துள்ளது விரைந்து பயன்படுத்துவீர் இன்று மட்டும். ; வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் ஆக்டிவேட் செய்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

தற்போது மீண்டும் வாட்ஸப் கால் இலவசமாக கொடுத்துள்ளது விரைந்து பயன்படுத்துவீர் இன்று மட்டும். ; வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் ஆக்டிவேட் செய்வது எப்படி?


வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் காலிங் அம்சம் அனைத்து ஆன்டிராய்டு பயனாளிகளுக்கும் கிடைக்கின்றது. மாதம் 70 கோடி பயனாளிகளை கொண்டிருக்கும் உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப், வாய்ஸ்கால் சேவையை ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் வழங்கியுள்ளது.
ஆன்டிராய்டு இல்லாத இயங்குதளங்களை பயன்படுத்துவோர் சில காலம் காத்திருக்க தான் வேண்டும். ஆனால் ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்கள் இந்த சேவையை சுலபமாக ஆக்டிவேட் செய்யலாம். எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே பாருங்கள்..

வாட்ஸ்ஆப்வாட்ஸ்

ஆப் வாய்ஸ்கால் சேவையை ஆக்டிவேட் செய்ய அப்டேட் செய்யப்பட்ட வாய்ஸ்ஆப் இருக்க வேண்டும், புதிய அப்டேட் பெற்ற வாட்ஸ்ஆப் செயலியை இங்கு க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

வெர்ஷன்

ஒரு வேலை நீங்கள் பழைய அப்டேட் இருக்கும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது வாய்ஸ்கால் சேவையை பெற முடியாது. தற்சமயம் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.12.7

அப்டேட்

புதிய அப்டேட் செய்த பின் ஏற்கனவே வாய்ஸ்கால் சேவை பெற்ற ஒருவரை உங்களுக்கு கால் செய்ய சொல்லுங்கள்.

மிஸ்டு கால்

மிஸ்டு கால் கொடுக்காதீர்கள், இது வேலை செய்யாது. முதலில் அழைப்பு வர வேண்டும், பின் அழைப்பை டிஸ்கனெக்ட் செய்யும் முன் வாட்ஸ்ஆப் வாய்ஸ்காலிங் ஆக்டிவேட் ஆக வேண்டும்.

அம்சம்

வாய்ஸ்காலிங் சேவை ஆக்டிவேட் ஆன பின் கால்ஸ், சாட் மற்றும் கான்டாக்ட் என மூன்று பத்திகள் வாட்ஸ்ஆப் திரையில் தெரியும்

ஆக்டிவேட்

வாய்ஸ்காலிங் ஆக்டிவேட் ஆன பின் வாட்ஸ்ஆப் திரையில் இருக்கும் மூன்று பத்திகளில் கால்ஸ் ஆப்ஷனை கொண்டு வாய்ஸ் கால் செய்ய முடியும்.

CLICK FOR WHATSAPP NEW VERSION - WHATSAPP CALL

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி