இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆணை நிதித்துறையிடம் வழங்கப்பட்டது!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆணை நிதித்துறையிடம் வழங்கப்பட்டது!!!


நேற்று (02.03.2015) SSTA மாநில பொறுப்பாளர்கள் தலைமை செயலகம் சென்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை நிதித்துறை செயலாளர் மற்றும்
நிதித்துறை செயலாளர் (செலவீனம் )மற்றும் ,நிதித்துறை இணைசெயலாளர், துணைசெயலாளர் அவர்களை சந்தித்து நீதிமன்ற ஆணையை வழங்கினர், இணை செயலாளர் அவர்கள் முன்னரே இதுகுறித்து அறிந்தோம் என்றனர் இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.மேலும் ஊதியம் குறித்து பிற விபரங்களை பற்றி விபரங்கள் ௯றினோம்,அதுபற்றி அடுத்த கட்ட நடவடிக்கை SSTA சார்பில் விரைந்து எடுக்கப்படும்.மேலும் கல்வித்துறை செயலாளர் அவர்களையும் சந்தித்து CRC (Spl cl)பற்றியும் விரைந்து அரசாணை வெளியிட வலியுறுத்தப்பட்டது அவர்களும் விரைவாக ஆணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

அடுத்ததாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்திப்பு நடைபெற்றது அதில் பின்னேற்பு,சிறப்பு தற்செயல் விடுப்பு ,ஒருநாள் இடைவெளியில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தில் இருந்து தொடர முடியாமல் உள்ளது பற்றியும் ,மலை சுழற்சியினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பற்றியும் விரிவாக ௯றி அதற்கு விரைவாக முடிவு எட்ட கேட்டுக்கொள்ளப்பட்டது ,சிறப்பு தற்செயல் விடுப்பு ஆணைகல்வி செயலாளர் அலுவலகத்தில் சர்குலரில் உள்ளது விரைவாக வெளி வந்துவிடும் என உறுதி அளித்துள்ளார்கள். ஊதியத்திலும் அரசின் பதிலை பொறுத்து உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக உள்ளது. உண்மையாக போராடுவோம் !!இழந்ததை விரைவில் வென்றிடுவோம்!! வழக்கறிஞர் சந்திப்பு பற்றிய விபரம் விரைவில் பதிவிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி