மருத்துவ அதிகாரி பதவிக்கு தேர்வுடி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2015

மருத்துவ அதிகாரி பதவிக்கு தேர்வுடி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு, மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும்' என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழக மருத்துவ பணிகள் துறையின், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பிரிவில், உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு, 82 காலியிடங்கள் உள்ளன. சித்தா 63; ஆயுர்வேதா எட்டு; யுனானி மூன்று; ஹோமியோபதி ஒன்பது காலியிடங்கள் உள்ளன.இவற்றை நிரப்ப, நேரடித் தேர்வு நடத்தப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு,இரண்டு தாள்களாக, மே 31ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடக்கிறது. தகுதியானோர், தங்கள் விண்ணப்பங்களை, ஏப்ரல் 24ம் தேதி வரை, ஆன் - லைனில் பதிவு செய்யலாம். இத்தேர்வை எழுதுவதற்கான தகுதி, காலியிடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி