கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2015

கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் அனுப்பிய விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்கால கட்டத்தில் வினாத்தாள் கசிவு பரிமாற்றம், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் ஏதாவது ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பு விடுகிறது.
தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்ட நிலையில் கணிதப்பாட வினாத்தாள் ஆசிரியர்களுக்கு இடையே வாட்ஸ்–அப் மூலம் பரிமாறிக்கொண்டது பெற்றோர்–மாணவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் அளித்த விளக்கம் வருமாறு:–பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காத வகையில் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறோம்.தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி கையேட்டிலும் விளக்கமாக தெரிவித்து இருக்கிறோம்.கண்காணிப்பாளர்கள் தற்போது செல்போன்களை தேர்வு கட்டுப்பாட்டு அறையில் வைத்துசெல்ல வேண்டும். அவசர தேவைக்கு மட்டும் முதன்மை காண்காணிப்பாளர் அறையில் செல்போனை பயன்படுத்தலாம். மற்றபடி அந்த மையத்தின் டெலிபோன் எண்ணை பயன்படுத்தவேண்டும் என அனைத்து கண்காணிப்பாளருக்கும் அறிவுறுத்தப்பட்டது.ஆனால் ஓசூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது. வினாத்தாள் வாட்ஸ்–அப் மூலம் தேர்வு கண்காணிப்பாளர் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்களும் ஒரு தனியார் பள்ளியை சேர்ந்தவர்கள். அவர்கள் இனி எந்த பள்ளியிலும் பணி செய்ய முடியாது.இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்வு மையத்திற்குள் செல்போனை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறையின் உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும்.

இவ்வாறு கு.தேவராஜன் எச்சரித்துள்ளார்.

9 comments:

  1. கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்

    ReplyDelete
    Replies
    1. ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
      அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
      தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடைய உரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்து உள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின் நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
      அனைவரும் வருக! ஆதரவு தருக!
      இப்படிக்கு,
      ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
      தமிழ்நாடு.
      தொடர்புக்கு :-
      ஜெகநாதன் மதுரை – 9442880680
      ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் – 
      மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
      ரமேஷ் நாமக்கல்-9942015830
      சிவபிரகாஷ் கோவை –7708058814
      பழனி திருவண்ணாமலை-9524805873

      Delete
  2. I saw the rule in the hand book prior to the exams. Then how come these people knowingly taken their mobile inside the hall? Should be punished.

    ReplyDelete
  3. மாண்புமிகு முன்னால் முதல்வர் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்த இரவோடு இரவாக ஆசிரியர்கள் இடமாறுதல் பல நடந்து அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. ஆக பள்ளிக் கல்வித் துறையில் இம்மாதிரியான செய்தி சகஜம் தானே ?

    ReplyDelete
  4. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இம்மாதிரியான முறைகேடுகளில் வல்லமை பெற்றவர்கள் என்று மக்களிடையே பரவலான செய்தி அடிபடுகிறது. ஆக இம்மாதிரியான முறைகேடுகளில் ஈடுபட்டு மாநில அளவில்முதல் மதிப்பெண்கள் பெற்று சாதனை என்று பீற்றிக் கொள்ளும் இப்பள்ளிகளுக்கு முன் எம் அரசு பள்ளிகளும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மட்டுமே திறன் சார்ந்த சாதனையாளர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
      அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
      தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடைய உரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்து உள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின் நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
      அனைவரும் வருக! ஆதரவு தருக!
      இப்படிக்கு,
      ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
      தமிழ்நாடு.
      தொடர்புக்கு :-
      ஜெகநாதன் மதுரை – 9442880680
      ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் – 
      மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
      ரமேஷ் நாமக்கல்-9942015830
      சிவபிரகாஷ் கோவை –7708058814
      பழனி திருவண்ணாமலை-9524805873

      Delete
  5. Not only namakkal district all other district also same.the important think ennana govt teacher also doing this like for money not all the teacher..5000, and drinks party for them.the government students toppers only sufferd .they can't get engineering and mbbs seat.

    ReplyDelete
  6. அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையே, தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமித்தது யார்??.

    இந்த தவறுக்கு அடிப்படையான காரணகர்த்தா யார்???

    அரசின் உத்தரவை மீறிய அரசு அதிகாரிகளை என்ன செய்ய போகிறார்கள்????.

    தேர்ச்சி விகிதம் 100% த்தை பெறுவதற்க்கு எந்த தவறையும் செய்ய துணியும் ஆசிரியர்களாகட்டும், அதிகாரிகளாகட்டும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி என்ன நிணைக்கிறார்கள்?????

    செயற்க்க்கையாக தேர்ச்சி விகிதம் 100% த்தை பெறுவதற்க்கு ஆசிரியர்களாகட்டும், அதிகாரிகளாகட்டும் தங்கள் நல்லபெயர் எடுக்க வேண்டி இனி நடைபெற இருக்கும் விடைத்தாழ் திருத்தும் பணியில் எந்தவொரு தவறான செயல்களும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயமில்லை????

    மாணவர்களின் எதிர்காலம் இந்த சுயநலவாதிகளின் பிடியில், வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி