கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'


பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் நான்கு மதிப்பெண் கேள்விக்கான விடை, அடுத்த கேள்வியாக அமைந்திருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இத்தேர்வு வினாத்தாளில் சிறுவினா பகுதியில் 'பண்டைய கடல் வாணிபம் குறித்து எழுதுக' என்று 43வது கேள்வி இடம் பெற்றது. உரைநடை பகுதியை 'பாராகிராபாக' கொடுத்து அதில் இருந்து ஐந்து கேள்விகளுக்கு விடை எழுதும் வகையில் 46வது கேள்வி இடம் பெற்றது. அதில், பண்டைய கடல் வாணிபம் பற்றிய முழு தகவல்கள் இடம் பெற்றிருந்தது. 43வது கேள்விக்கான விடையாக அந்த 'பாராகிராப்' அமைந்திருந்தது.ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "43வது கேள்விக்கான விடையாக 46வது கேள்வியை வரி மாறாமல் எழுதினாலே நான்கு மதிப்பெண் உறுதியாக கிடைக்கும். மாணவர்கள் பெரும்பாலும் இதை புரிந்துகொண்டு விடை எழுதிவிட்டனர்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி