குறுவள மைய பயிற்சி நாள்களை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2015

குறுவள மைய பயிற்சி நாள்களை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம்


பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளது:

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் செயல்வழிக் கற்றல் பயிற்சி (ஏபிஎல்) பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், படைப்பாற்றல் கல்விப் பயிற்சி (ஏஎல்எம்) பயிற்சி பெறும் 6-8-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் ஓராண்டில் பயிற்சி பெறும்10 நாள்களையும் 10 பணி நாள்களாகக் கருதலாம் என்றும், அந்த 10 நாள்களும் பள்ளிச் செயல்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 பணிநாள்களுக்குள் அடங்கும் வகையில் அனுமதிக்கலாம் எனவும் ஆணையிடப்படுகிறது.பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சிகளில் கலந்துகொள்ளும் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும் திருத்தம் செய்யப்படுகிறது.

அதாவது இத்தகைய ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல் பணி நாள்களில் வழங்க கருதவேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பங்கேற்கும் நாள்கள் பணிநாள்களாக இருப்பின் பணி நாள்களாகவே கருதலாம். விடுமுறை நாள்களாக இருப்பின் 10 நாள்களுக்கு மிகாமல் அதனை ஈடுசெய் விடுப்பாக (சிறப்பு தற்செயல் விடுப்பு) அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி