'சிசிடிவி' பொருத்தாத பள்ளிகள் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2015

'சிசிடிவி' பொருத்தாத பள்ளிகள் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து


பெங்களூரு: "'சிசிடிவி கேமராக்கள் பொருத்திக் கொள்ளாத பள்ளிகளுக்கு, அடுத்த ஆண்டிலிருந்து தேர்வு மைய அங்கீகாரம் கிடைக்காது,” என, கர்நாடகா உயர்நிலை கல்வி தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
தேர்வாணையத்தின் இயக்குனர், யஷோதா போப்பண்ணா கூறியதாவது: தேர்வு மையங்களில், இந்தாண்டு, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும் என, உத்தர விடப்பட்டு உள்ளது; ஆனால், கட்டாயமாக்கப் படவில்லை. எனினும், அடுத்த ஆண்டு, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படாத பள்ளிகளுக்கு, தேர்வு மையம் வழங்க வேண்டாம் என, தேர்வாணையம் தீர்மானித்து உள்ளது. வரும் 30ம் தேதி முதல், மாநிலத்தின், 2,966 தேர்வு மையங்களில், 10ம் வகுப்பு தேர்வு துவங்கவுள்ளது;இவைகளில், 313 பள்ளிகளில் மட்டுமே, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது.மற்ற பள்ளிகளில், கண்காணிப்பாளர் பொறுப்பில் தேர்வுகள் நடக்கவுள்ளன. 'சிசிடிவி' கேமரா பொருத்துவதால், மாணவர்கள் காப்பியடிப்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். அதுமட்டுமின்றி, 'சிசிடிவி' கேமரா உள்ளது என்ற பயத்தால், மாணவர்களும் கவனமாக தேர்வு எழுதுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி