இதே நாளில் அன்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2015

இதே நாளில் அன்று

1981 - மார்ச் 21

தமிழகத்தில், மதுவிலக்கு தளர்த்தப்பட்ட நாள்! கடந்த, 1977ல், தமிழக முதல்வரான, எம்.ஜி.ஆர்., மது விலக்கை முழுமையாக அமல்படுத்தி, மது குடித்தால் ஆறு மாதம் சிறை தண்டனை என, சட்டம் கொண்டு வந்தார். புதுச்சேரி, 'சரக்கு'கள் ரகசியமாக உள் நுழைந்து, தாராளமாகக் கிடைத்தன. போலீசுக்கு வருமானம்; அரசுக்கு வருவாய் நஷ்டம். அப்போதைய பிரதமர் இந்திராவால், எம்.ஜி.ஆர்., ஆட்சி திடீரென கலைக்கப்பட்டு, மறு தேர்தல் மூலம், மீண்டும் முதல்வரான, எம்.ஜி.ஆர்., மதுவிலக்கை தளர்த்தினார். 'பர்மிட் முறையில் மது வாங்கலாம்' என்றார். அப்புறம், கள் மற்றும் சாராய கடைகளையும் முழுமையாக திறந்தார். 'அரசுக்கு வருவாய், மது விற்பனையால் தான் கிடைக்கும்; இல்லையேல், அரசு நடத்த முடியாது' என்று இதற்கு காரணம் கூறினார். ராஜாஜி மதுவிலக்கை அமல்படுத்தியபோது, 'இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் நஷ்டத்தை ஈடு செய்ய, விற்பனை வரி எனும், வரி வசூல் முறையை கொண்டு வந்துள்ளேன்' என்றார்.இப்போது, விற்பனை வரி எனும், சேல்ஸ் டாக்சும் இருக்கிறது; டாஸ்மாக்கும் இருக்கிறது. யார் கேட்பது?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி