பள்ளிகளில் அம்மை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2015

பள்ளிகளில் அம்மை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?


திருப்பூரில், அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதால், இதுகுறித்த விழிப்பணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் நிலவுகிறது.
வெப்பகாலத்தில் உடல் சூட்டை தணிக்க இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி, நுங்கு மற்றும் எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை பழச் சாறு வகைகளை அடிக்கடி உட்கொள்வது அவசியம்.

காரம் மற்றும் மசாலா, எண்ணெய் மிகுந்த உணவு பதார்த்தங்களை தவிர்த்து, சைவ உணவுக்கு மாறுவது உடல்நலத்துக்கு நல்லது. தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது, நா வறட்சி மற்றும் உடல் சோர்வை தணிக்கும். கடும் வெயில் பாதிப்பால், திருப்பூரில் அம்மை நோய் தாக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது.இதற்கு, பத்திய முறையை கடைபிடிப்பதன் மூலம் 15 முதல் 20 நாட்களில், இதன்தாக்கத்தில் இருந்து விடுபடலாம். இளநீர், நுங்கு, பனங்கற்கண்டு மற்றும் பழங்கள் சாப்பிடுதல்; வீடுகளில் வேப்பிலை பயன்படுத்துதல்; குளிர்ச்சியான சூழலிலேயே இருத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றினால், ஓரிரு வாரங்களுக்குள் அம்மை நோய் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. அம்மை நோய் பாதிப்புக்கு மருத்துவ சிகிச்சை பெறாமல் பத்திய முறையை பின்பற்றுவதே, மக்களின் நீண்டகால வழக்கமாக உள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், சிறுவர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு எளிதாக ஏற்படுவதால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

வகுப்பறையில் மாணவர்களை நெரிசலாக உட்கார வைப்பது, போதிய காற்றோட்டமின்றி, வகுப்பறையில் இருக்க வைப்பது போன்றவை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.உடல் சூட்டை தணிக்க பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து, மாணவர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து பெற்றோருக்கும், ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும். அம்மை நோய் பாதித்த குழந்தைகளை, பெற்றோர் தனி கவனத்துடன் பராமரிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி