ஒரே நேரத்தில் இரு படிப்பு; ஆசிரியர் பணி தர மறுப்பு பள்ளிகல்வித்துறை இயக்குநர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2015

ஒரே நேரத்தில் இரு படிப்பு; ஆசிரியர் பணி தர மறுப்பு பள்ளிகல்வித்துறை இயக்குநர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு


ஒரே நேரத் தில் இரு படிப்பு படித்ததாக கூறி ஆசிரியர் பணிமறுக்கப்பட்டவரின் மனுவை பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, விளாங்குடியை சேர்ந்த எஸ்.தேன்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்செய்த மனு:
நான், பிஏ (ஆங்கிலம்), எம்ஏ (ஆங்கிலம்) மற்றும் பிஎட் முடித்துள்ளேன். கடந்த ஜன. 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை டிஆர்பிநடத்தியது. இதில் நான் கலந்து கொண்டேன். மாநில அளவில் 49வது இடம் பிடித்தேன். இதன்பிறகு பிப். 16ம் தேதி மதுரையில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டேன். சரிபார்ப்பின்போது 2008&10ம் ஆண்டில் எம்ஏ முடித்ததாகவும், இதே காலத்தில் பிஎட் முடித்துள்ளதாகவும் கூறிஎனக்கு பணி வழங்க மறுத்தனர்.ஆனால், நான் 2008&09ல் எம்ஏ முதலாமாண்டு தேர்ச்சி பெற்றேன். 2009&10ம் ஆண்டில் பிஎட் தேர்ச்சி பெற்றேன். இதன் பிறகே எம்ஏ இரண்டாமாண்டு படிப்பை 2010&11ல் முடித்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படிப்பை படிக்கவில்லை என்பதை அதிகாரிகளிடம் விளக்கினேன். இதற்கான சான்றுகளையும் தாக்கல் செய்தேன்.

இதையடுத்து தேர்வு பெற்றோர் பட்டியலில் நான் இருப்பதாகவும், என் பணி நியமனம் குறித்து பள்ளி கல்வித்துறைதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவித்தனர். எனக்கு ஆசிரியர் பணி வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் லூயிஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, மனுதாரரின் மனு வை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் 6 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

13 comments:

  1. Am sivaselvi. i need to know weather she discontinued her M.A during b.ed joining period

    ReplyDelete
  2. respected admin sir,
    please clear the doubt

    ReplyDelete
  3. Apdi padika mudiuma? Y selladhu

    ReplyDelete
    Replies
    1. I passed M.A I year on 2006-2007, after joined B.ED on 2007-2008, than I completed M.A II year on 2008-2009. I got selected of trb 2012 batch. But during certificate verification time they said M.A AND B.ED degrees are dual af they rejected me. So that only an asking you admin sir.

      Delete
    2. I passed M.A I year on 2006-2007, after joined B.ED on 2007-2008, than I completed M.A II year on 2008-2009. I got selected of trb 2012 batch. But during certificate verification time they said M.A AND B.ED degrees are dual af they rejected me. So that only an asking you admin sir.

      Delete
  4. Apo * potrundha reject paniduvangala? My frnd has the same problem. Pls anybody know solution for this? Pls tell....

    ReplyDelete
  5. Apo * potrundha reject paniduvangala? My frnd has the same problem. Pls anybody know solution for this? Pls tell....

    ReplyDelete
  6. Am also affect same problem...i also did same like that...please update the news like this......98653 82450

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Any solution for this problem?

    ReplyDelete
  10. Still we didn't get clear what is the actual definition if dual degree

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி