ஆசிரியர்களை அழைத்துப் பேச மனமில்லை.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2015

ஆசிரியர்களை அழைத்துப் பேச மனமில்லை..


தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். பல போராட்டங்களை நடத்திய பிறகு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி,
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை அழைத்துப் பேசி ரூ.750 அளிப்பதாக அறிவித்தார். அதைக்கூட இந்த அரசு செய்யவில்லை. குறைந்தபட்சம் எங்களை அழைத்துப் பேசியிருந்தால் கூட எங்கள் நியாயங்களை நாங்கள் தெரியப்படுத்த வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் இந்த அரசு ஆசிரியர்களை கண்டாலே மவுனமாக இருக்கிறது.

ஒருவேளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகள் தேவையில்லை என்ற எண்ணம்தான் காரணம் என்று நினைக்கத் தோன்றுகிறது. எங்களின் 15 அம்சகோரிக்கை என்பது எளிமையானவைதான்.பெரிய அளவில் நாங்கள் ஏதும் கேட்கவில்லை. மத்திய அரசின் 6வது ஊதியக் குழுவில்ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதை செய்ய இந்த அரசு மறுக்கிறது. அதனால் நாங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.9833 இழந்து வருகிறோம். இந்த வேதனை வேறு எங்குமே கிடையாது. ஆனால், ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறீர்கள் என்று அரசு காரணம் கூறுகிறது. சம்பளத்துக்காக ஆசிரியர்கள் இல்லை. அவர்கள் வாழ்வாதாரத்துக்கானதுதான் சம்பளம்என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் வீண் என்று அரசு நினைக்கிறதா.

இவ்வளவு கணக்கு பார்க்கும் அரசு ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வு ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பணத்தை எங்கே எந்த கணக்கில் வைத்துள்ளது என்று காட்டவில்லை.முறையான பதிவுகள் இல்லை. பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் சேர்ந்த ஆசிரியர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்ட நிலையில் அந்த குடும்பங்களுக்கு இதுவரையில் பண பயன் ஏதும் அரசு பெற்றுத் தரவில்லை. இது போன்றபிரச்னைகளை முன்வைத்து ஆசிரியர்கள் தனித்தனியாக போராடி வருகிறோம். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் போராட்டங்கள் நடத்திய பிறகு சென்னையில் நான்கு நாட்கள் மறியல் போராட்டம் நடத்தினோம். அப்போது கூட இந்த அரசு எங்களை அழைத்துப் பேசவில்லை. அதுதான் வருத்தம் அளிக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி