PGTRB: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-ல் பணி நியமன கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2015

PGTRB: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-ல் பணி நியமன கலந்தாய்வு.


ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வருகிற 28-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப் படையில் கலந்தாய்வு நடைபெறும்.

முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், அதன்பிறகு வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலு வலகங்களில் நடைபெறும் கலந்தாய் வில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வுக்குவரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற் றுடன் காலை 9.30 மணிக்கு வந்துவிட வேண்டும்.

மேற்கண்ட தகவலை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி