10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு விடைத்தாளை திருத்துமாறு கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2015

10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு விடைத்தாளை திருத்துமாறு கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்தம்


தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைந்தது. 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத் தாள் திருத்தும் பணி கடந்த 20-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 93 மையங்களில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், 10-ம் வகுப்பு முடிவுகள் மே 21-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடை யாத நிலையில், முடிவு வெளியாகும்தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் தேர்வெழுதிய மாணவர்களும், ஆசிரியர்களும் குறிப்பாக, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.கணிதம், அறிவியல் பாட விடைத்தாள்களை திருத்தி முடித்த ஆசிரியர்கள், தங்களைஆங்கில தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்துமாறு நிர்ப்பந்திப்பதாக புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களை ஆங்கில தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யுமாறு நிர்ப்பந்தம் செய்கின்றனர். வினாக்களுக்கான விடைக் குறிப்புகள்கொடுக்கப் பட்டாலும், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் திருத்துவதுதான் சரியாக இருக் கும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் பாடங்களில் தலா 2 தாள்கள் இருப்பதால் அவற்றை திருத்துவதற்கு கூடுதல் நாட்கள் ஆகும்.விடைத்தாள் மதிப்பீட்டு பணியே முடிவடையாத நிலையில், தேர்வு முடிவு மே 21-ம் தேதி வெளியாகும் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டனர்.

எனவே, விடைத்தாள் மதிப்பீட்டு பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக வேறு பாட ஆசிரியர்களைக் கொண்டு ஆங்கிலத் தேர்வு விடைத்தாள் களை திருத்தச் சொல்கின்றனர். இது எந்த வகையில் நியாயம்?விடைத்தாள் பணியை முடித்த கணிதம், அறிவியல் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கவும் மறுக்கிறார்கள். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். வேறு பாட ஆசிரியர்களைக் கொண்டு ஆங்கிலத் தேர்வு விடைத் தாள்களை திருத்தம் செய்தால் மதிப்பீடு சரியாக இருக்குமா என்ற அச்சம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி