11 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது எல்காட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

11 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது எல்காட்


தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 2014-15, 15-16-ம் கல்வியாண்டுகளில் 11 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கணினித் திறன் மேம்பாட்டிற்காக அவர்களுக்கு, மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழக சிறப்பு முயற்சிகள் துறையின் கீழ் வழங்கப்படும் இத்திட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் 21.65 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மேலும் 11 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்க ரூ. 1100 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.தற்போதைய 2014-15-ம் கல்வியாண்டிற்கு 5.5 லட்சம், 2015-16ம் கல்வியாண்டிற்கு 5.5 லட்சம் என 11 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யும் பணியை வழக்கம் போல் எல்காட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த வகையில் 11 லட்சம் மடிக்கணினிகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி