மே 11 முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள்: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2015

மே 11 முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள்: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு


2015- 2016ஆம் கல்வி ஆண்டின் எம்பிபிஎஸ் மற்றும் BDS படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் மே 11 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மாணவர் சேர்க்கை செயலாளர் சுகுமார், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்த விபரங்கள் வரும் மே 10 ஆம் தேதி செய்தித்தாள்களில் வெளியாகும் என தெரிவித்தார்.
மே 11ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என தெரிவித்த அவர், 19 மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவ கல்லூரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.WWW.TNHEALTH.ORG என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப மே 29ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் ஜூன் 12ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது எனவும் சுகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி