வேளாண் கல்லூரிகளில் சேர மே 15முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2015

வேளாண் கல்லூரிகளில் சேர மே 15முதல் விண்ணப்பம்


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 15ம் தேதி முதல் இணையதளம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.
உறுப்பு கல்லூரியில் 1,220 இடங்கள், இணைப்பு கல்லூரியில் 1,080 இடங்கள் என மொத்தம் 2,300 இடங்கள் நிரப்பப்படவுள்ளது.இதில், 50% இடங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தாலும், 50 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்படுகிறது. இப்பாடத்தில் மேல்நிலைப்பள்ளி கல்வி அல்லது அதற்கு இணையான கல்வி பிரிவில் பொது கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.tnau.ac.in/admission.htmlஎன்ற இணையதளத்தில் சென்று பூர்த்தி செய்ய வேண்டும்.13 பட்டப்படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது. பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300ம் ஆகும். இணையதளம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்தலாம் அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட சலானை எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளைகளிலும் செலுத்தலாம். வேளாண் பல்கலைக்கழகத்தின் மையங்களிலும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தின் மூலமாக மே 15 முதல் ஜூன் 13 வரை விண்ணப்பங்களை இணையதளம்மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கஜூன் 13ம் தேதி கடைசி என்றும், தரவரிசை பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி