பள்ளி வேலை நாட்களை 200 ஆக குறைக்கதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2015

பள்ளி வேலை நாட்களை 200 ஆக குறைக்கதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, துவக்கப்பள்ளி வேலை நாள், 220 என்பதை, 200 நாட்களாக குறைத்து அரசு ஆணை வெளியிட வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வட்டார செயற்குழு கூட்டம், நாமக்கல் அடுத்த எருமப்பட்டி யூனியன், கொடிக்கால்புதூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.வட்டாரத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராமராசு வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கருப்பன், பொதுக்குழு உறுப்பினர்செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதும்உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டு விழா கொண்டாடுவதற்காக, அனைவருக்கும்கல்வி இயக்கம், 2,250 ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதேபோல், துவக்கப்பள்ளிகளுக்கும் ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதுடன், 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஒன்றியங்கள் தோறும் ஆசிரியர் குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆண்டுக்கு, இரண்டு முறை தொழில் வரி கட்டும் முறையை ரத்து செய்ய வேண்டும்.

நவீன கற்பித்தல் முறையை வகுப்பறையில் மேற்கொள்ளும் வகையில், அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, துவக்கப்பள்ளி வேலை நாள், 220 என்பதை, 200 நாட்களாக குறைத்து அரசு ஆணை வெளியிட வேண்டும்.குறுவள மையம் மற்றும் வட்டாரவள மையத்தில் பயிற்சிகளை வழங்குவதை தவிர்த்து, அந்தந்த பள்ளியில் நேரடியாக பயிற்சி வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கம் முன்வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.வட்டார பொருளாளர் சேகர், நிர்வாகிகள் அருண்குமார், ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி