2016 தேர்தல் அதிமுகவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேக்டோ மாநில செயலாளர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

2016 தேர்தல் அதிமுகவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேக்டோ மாநில செயலாளர்


ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 2016ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய விளைவுகளை அதிமுகவிற்கு ஏற்படுத்தும் என்று ஜேக்டோ மாநில செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறினார்
.6வது ஊதியக்குழுவில் உள்ள அனைத்து படிகளையும் தமிழக ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை தாய்மொழியாக தமிழ்வழி கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழக அரசும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில்உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஜேக்டோ மாநில செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி ஆசரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத முதல் வாரத்திலோ தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். மேலும் 2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படுவதோடு அதிமுகமீது அதிருப்தி ஏற்படுத்தும். அது மிகப்பெரிய விளைவுகளை அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி