குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி


மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில அளவில் சரிபார்த்தலுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ’டாப் சீட்’ முறை நடப்பாண்டிலும் பின்பற்றப்படுகிறது. மாணவர்களின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய இந்த சீட்டின் ’பி’ பகுதியில், மதிப்பெண் பதிவு செய்யப்படுகிறது.இம்மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் ’சர்வரில்’ பதிவேற்றப்படுகின்றன. கடந்தாண்டுவரை, சம்பந்தப்பட்ட மையங்களிலேயே மதிப்பெண்கள் சரி பார்க்கப்பட்டன.

நடப்பாண்டு முதல், மொழிப்பாடங்களை தவிர, மற்ற பாட மதிப்பெண்கள், மாநில அளவில் மறுபரிசோதனை செய்யும் வகையில், சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ’விடைத்தாள் முகப்புசீட்டு ’பி’ பிரிவில், மதிப்பெண் பதிவு செய்யப்படும். விடைத்தாள் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்களை ஒப்பிட்டு சரிபார்க்க, அப்பகுதியிலுள்ள ’பார்கோடு’ பயன்படுத்தப்படுகிறது. மாநில அளவில் சரிபார்க்கவே சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது’என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி