பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2015

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வகஉதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த 2 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இளநிலை உதவியாளர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலேயே இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.உரிய சான்றிதழ்களுடன் சென்று இந்த மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6 ஆகும்.இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம் அந்தந்த மாவட்ட அளவில் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவோரிலிருந்து 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.

1 comment:

  1. Welcome u all to our ARGTA brte association Unnavirutha porattam 'Pattini" at Dindukkal dt on 10.5.2015

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி