சாலை ஆய்வாளர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2015

சாலை ஆய்வாளர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள்


சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 9சாலை ஆய்வாளர் பணியிடங்களை மாவட்ட அளவிலான போட்டித் தேர்வின் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் அனுப்புவதற்கு கடைசி தேதி ஏப். 30 என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஒன்பது சாலை ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஐடிஐ பட்டயப் படிப்பில் சிவில் டிராப்ட்ஸ்மேன் கல்வித் தகுதியுடன் 1.7.2012 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு கீழ்க்கண்ட வகுப்பைச் சார்ந்தவர்களிடமிருந்து உரிய ஆவணங்களுடன் ஏப். 30 க்குள் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளர்ச்சிப் பிரிவில் விண்ணப்பங்கங்களை வழங்கவேண்டும்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும், பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம்.அனைத்து வகுப்பைச் சார்ந்த (பொது) முன்னுரிமையற்றவர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பைச் சேர்ந்த பெண், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமையற்றவர், பிற்பட்டோர் (முஸ்லிம் அல்லாதவர்கள்) வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமையற்றவர், அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமையற்றவர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பெண், பிற்பட்டோர் (முஸ்லிம் அல்லாதவர்கள்) வகுப்பைச் சேர்ந்த பெண் மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண் ஆகிய இனச்சுழற்சியில் தலா ஒரு பணியிடம் வீதம் நிரப்பப்பட உள்ளது என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி