30 புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம்: துணைவேந்தர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

30 புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம்: துணைவேந்தர் தகவல்


வரும் 2015-16 கல்வியாண்டில் புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தொடங்க 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறினார்.
"கல்வி ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே அறிவுப் பரிமாற்றக் கூட்டுறவை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் திங்கள்கிழமை நடத்தப்பட உள்ளது.இதுதொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்க உள்ள இந்த 3 நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.மாநாடு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நிறைவடைய உள்ளது.

இதில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் எம்.ராசாராம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வணங்காமுடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.தமிழகத்தில் இப்போது 640-க்கும் அதிகமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்இயங்கி வருகின்றன. வருகிற 2015-16 கல்வியாண்டில் புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தொடங்க 30 விண்ணப்பங்கள் வரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பரிசீலிக்கப்பட்டு, என்.சி.டி.இ.-யிடம் அளிக்கப்படும்.எனவே, வரும் கல்வியாண்டில் 20 முதல் 30 புதிய பி.எட். கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி