அரசு ஊழியர்களுக்கு அகிலேஷ் அரசு தாராளம்: 6 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2015

அரசு ஊழியர்களுக்கு அகிலேஷ் அரசு தாராளம்: 6 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி


உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்துஅம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வருடத்தில் 6 மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அரசு ஊழியர்களுக்கு தாராளம் காட்டி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்கள் வருடத்தில் 35 நாட்கள் முன்னர் இருந்தது. நேற்று அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் முன்னாள் பிரதமர்களான சரண்சிங், சந்திரசேகர், மற்றும் பீகார் முன்னள் முதல்வர் கர்பூரி தாக்கூர் ஆகியோரின் பிறந்த நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டது. இதன் மூலம் அரசு விடுமுறை நாட்கள் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது.மேலும் அரசு ஊழியர்கள் வருடத்தில் மொத்தம் 6 மாதங்கள் பணியாற்றினால் போதும் எஞ்சிய 6 மாதங்களை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கு முன் முதல்வராக பதவி வகித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, தனது கட்சியின் நிறுவனரான கன்சிராம் பிறந்த நாள் உள்ளிட்ட தனது கட்சியின் மூத்ததலைவர்களின் பிறந்த நாளினை அரசு விடுறையாக அறிவித்தார். அதே போன்ற ஒரு விடுமுறை அரசியல் கொள்கையை அகிலேஷ் அரசும் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

இம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி அரசு ஊழியர்களின் ஓட்டு வங்கியை குறி வைத்து இப்படி தாராளம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.மற்ற மாநிலங்களான தமிழகம், மத்திய பிரததேசத்தில் தான் அதிகபட்சமாக அரசு விடுமுறை நாட்கள் 25 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உ..பி.யில் அரசு விடுமுறை நாட்கள் 38 ஆக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி