மே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவுதேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2015

மே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவுதேதி அறிவிப்பு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி ெவளியிடப்படும்' என, தமிழகஅரசு அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கி,31ம் தேதி முடிந்தது. 8.75 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுதினர்.விடைத் தாள்களை திருத்தும் பணி, மார்ச் 16ம் தேதிதுவங்கியது. நேற்று முன்தினம், பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்தும் மையப் பட்டியல்படி, மதிப்பெண், 'சிடி' தயாரிப்பு, மதிப்பெண் பட்டியல்தயாரிப்பு ஆகியபணிகள், தற்போது நடந்து வருகின்றன.பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10ம் தேதி நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும், 3,298 மையங்களில், 10.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி வெளியாகும்' என, நான்கு நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதை அரசு நேற்று உறுதி செய்து, தேர்வு முடிவு வெளியாகும் தேதியை, முறைப்படி அறிவித்தது.

அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி, காலை 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வுகள், மே 21ம் தேதி, காலை10:00 மணிக்கும் வெளியாகின்றன.தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டைப் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை, மதிப்பெண்களுடன், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in, ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி