ஜே.இ.இ. பிரதான தேர்வு முடிவுகள் வெளியீடு: முதன்மைத் தேர்வுக்கான கட்-ஆஃப் குறைந்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2015

ஜே.இ.இ. பிரதான தேர்வு முடிவுகள் வெளியீடு: முதன்மைத் தேர்வுக்கான கட்-ஆஃப் குறைந்தது


ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) பிரதானத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப். 27) வெளியிடப்பட்டன.முதன்மைத் தேர்வு மே 24-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை குறைந்துள்ளது. நிகழாண்டுக்கான பொதுப் பிரிவு கட்-ஆஃப் 105 புள்ளிகளாகும்.என்ஐடி, ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது.

இதில் முதலில் பிரதானத் (மெயின்) தேர்வு நடத்தப்படும். அடுத்ததாக முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு நடத்தப்படும்.2015-ஆம் ஆண்டுக்கான பிரதானத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 10.25 லட்சம் பேர் எழுதினர்.இதற்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. www.cbse.nic.in. இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.அடுத்ததாக மே 24-ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

பிரதானத் தேர்வில் முதல் 1.5 லட்சம் இடங்களைப் பெற்றவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.இந்த நிலையில் முதன்மைத் தேர்வுக்கான கட்-ஆஃப், கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டுக்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் 115 -ஆக இருந்தது.ஆனால், நிகழாண்டில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் 105-ஆகக் குறைந்துள்ளது. ஒபிசி70, எஸ்.சி. 50, எஸ்.டி. 44 என்ற அளவில் கட்-ஆஃப் உள்ளது.கட்-ஆஃப் குறைந்ததற்கு இயற்பியல் பாடக் கேள்விகள் இம்முறை மிகவும் கடினமாகக் கேட்கப்பட்டதே காரணம் எனப் பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.தமிழகத்திலிருந்து பிரதானத் தேர்வுக்குப் பதிவு செய்த 1.73 லட்சம் பேரில் 11,500 பேர் குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி