ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம்


ஆன் - லைன் மூலம் ரயில் டிக்கெட்டு, 'புக்' செய்வோருக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல புதிய சலுகைகளை, ஐ.ஆர்.சி.டி.சி., அளிக்கஉள்ளது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:
நம் நாட்டில், தினமும், 20 லட்சம் பேர் ரயில்களில் பயணிக்கின்றனர். இவர்களில், 52 சதவீதம் பேர், இணையதளம் மூலம் டிக்கெட் 'புக்' செய்து பயணிப்பவர்கள். இவர்களுக்கு மேலும் பல வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பயணிகளின் உடைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இன்சூரன்ஸ் திட்டத்தைஅறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, லேப் - டாப், மொபைல் போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்லும்போது, ரயிலில் திருடு போய் விட்டால், அதற்கு காப்பீடு தொகை தரப்படும்.'நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் டிக்கெட் 'புக்' செய்யும்போது, இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர விரும்பினால், அதற்குரிய பகுதியை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், இன்சூரன்ஸ் திட்டத்தில் சேருவது கட்டாயமல்ல. இந்த திட்டம் எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது, பின்னர் அறிவிக்கப்படும். மேலும், ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்கும் நடைமுறை, தற்போது குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமலில் உள்ளது. இந்த திட்டம், மேலும் பல ரயில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி