ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தாமல் அரசு தூங்குகிறது: ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தாமல் அரசு தூங்குகிறது: ஸ்டாலின்




'15 அம்ச கோரிக்கைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது' என்று திமுக பொருளாளர் ஸ்டாலிம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து இன்று ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,
''ஆசிரியர்களின் கூட்டமைப்பான "ஜாக்டோ" 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம், ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களின் பணி வரன்முறை செய்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட 15 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 8ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணி நடத்தினார்கள்.பிறகு ஏப்ரல் 19-ம் தேதி 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு தீர்த்து வைக்க வேண்டியது நம் கடமையாகும்.

போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அதிமுக அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரிக்கிறேன். ஆசிரியர்களை எந்தவித தாமதமும் இன்றி உடனே அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு நான் அதிமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 comment:

  1. I request to TN govt kindly and humbly why TN GOVT alloted cs teachers starting from 6 the std to +2 std for all the districts school. Even they have the syllabus also there are no cs teachers in that school. As I am physically Disabled women My age is 39 When will I get a job. On seeing this message TN govt really take steps I must believe. Which mother does not believe that the children expectation in TN.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி