கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2015

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்

ல்வி பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி கடந்த 3 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.150 கோடியை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை.

அதனால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மாணவரைக்கூட வரும் கல்வியாண்டில் சேர்க்க மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி தனியார் பள்ளிகளில் 1.43 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 2013-14-ஆம் கல்வி ஆண்டு வரை மொத்தம் 16,194 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்துக்குரியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அதிமுக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை.

வரும் கல்வியாண்டிலாவது அதனை முறையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி