தலைமை ஆசிரியர் காலியிடம் விரைவில் நிரப்ப திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

தலைமை ஆசிரியர் காலியிடம் விரைவில் நிரப்ப திட்டம்


மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 2012 வரை யிலும், முதுகலை ஆசிரியர்கள் 2009 வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.இதற்கான விபரங்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே சேகரித்து அனுப்பியது.

இப்பதவி உயர்வு பட்டியலில் குளறுபடிகளை தவிர்க்க, இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பதவி உயர்வு பட்டியல் ஒன்றை அனுப்பி வைக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக விடுபட்ட விபரங்களை நேரில் வரவழைத்துகல்வித்துறை ஊழியர்கள் சேகரிக்கின்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ நடப்பு கல்வியாண்டில் ஜூனில் பள்ளிகள் திறக்கும் நிலையில், மே மாத இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடங்கள் நிரப்பும் திட்டம் உள்ளது.இதற்கான கவுன்சிலிங் 2015 மே இறுதியில் நடத்த கல்விக் கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது,” என்றார்.

2 comments:

  1. Present School Location is 1 Hour Travel from Aranthangi, Thondy, Pattukottai Willing for MUTUAL TRANSFER to MADURAI , DINDIGUL , SIVAGANGAI dists Interested B.T SOCIAL Female Tr PLZ CONT .... jssrj2015@gmail.com

    ReplyDelete
  2. If any body willing mutual transfer dharmapuri to trichy second grade teacher plz contact 9943530008

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி